Tuesday, January 6, 2026 2:36 pm
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று செவ்வாய்க்கிழமை (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது உறுதியளித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் ஜெயக்கொடி வெளியிட்ட தகவலின்படி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கைகளுக்கமைய 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

