Friday, March 6, 2026 2:20 pm
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் காரணமாக கரீபியன் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்புவதற்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு திரும்ப முடியாத நிலை குறித்து சமூக ஊடகங்களில் மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளர் டேரன் சமி தனது விரக்தியை வெளிப்படுத்திய பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து T20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகள் வழியாக விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

