Wednesday, January 21, 2026 10:19 am
நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள், ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசு வைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குக் கூட தெரியும். ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்து கொண்டு சொல்கின்றார்.
மேலும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள், ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கிறோம். இவற்றைச் செய்யாமல் பொங்கல் வழங்கி என்ன பயன் என குறிப்பிட்டுள்ளார்.

