Tuesday, January 6, 2026 11:50 am
நாட்டில் உள்ள சிறுவர்களுக்கு விட்டமின் D சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிறுவர்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் இன்று அது அவர்கள் மத்தியில் குறைந்து காணப்படுவதோடு பாரியளவிலான தாக்கத்தினையும் செலுத்தி வருகின்றது.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணணிகள் போன்றவற்றின் அதீத பயன்பாடு காரணமாக சிறுவர்கள் அதிகளவு நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதனால், விட்டமின் D சத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகாலை நேரத்துச் சூரிய ஒளி அவர்களுக்குக் கிடைப்பதில்லை.விட்டமின் D இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதற்கு காலை நேரச் சூரிய ஒளி இன்றியமையாத ஒன்றாகும்.
விட்டமின் D குறைவடைவதனால் இலகுவாக சிறுவர்கள் நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாக்கக் கூடும் என சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை டிஜிட்டல் சாதனங்களின் பாவணையைக் குறைத்து அவர்களை அதிகாலையில் வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த முடியும் என மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


