Thursday, February 19, 2026 1:55 pm
இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் அதில் 27 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயலால் நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சமூகத்திலிருந்து விசர்நாய்க்கடியை முழுமையாக ஒழிக்க நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதுடன், முறையான கருத்தடை திட்டங்கள் மற்றும் பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு முறை என்பன அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

