Wednesday, December 31, 2025 11:11 am
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை (31) ஸ்ரீலங்கன் UL 189 ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

