Friday, February 6, 2026 3:52 pm
“புலி” திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமானவரித்துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமானவரித்துறை விதித்த அபராத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
அபராதத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விதிக்கவில்லை. விதிமுறையை மீறி படம் வெளியாகி ஏழு வருடங்கள் கழித்து அபராதம் விதித்துள்ளனர். எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் தரப்பு கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் அமலாக்கத்துறை விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

