Wednesday, November 19, 2025 1:56 pm
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவிற்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, நேற்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
10 கோடி இந்திய ரூபா பெறுமதியான ரோல்ஸ் ரோய்ஸ் black badge Spectre காரை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வாங்கி கொடுத்துள்ளார்.
பரிசாக வழங்கிய கார் மீது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது மகன்களான உயிர், உலக் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

