Tuesday, December 23, 2025 11:19 am
இலங்கையின் மூத்த நடிகர் சதிஸ்சந்திர எதிரிசிங்க உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை தனது 84வது வயதில் காலமானார்.
பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான சதிஸ்சந்திர எதிரிசிங்க சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் மறக்கமுடியாத வேடங்களில் நடித்துள்ளதோடு , கலை உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ஒரு இணையற்ற கலைஞரும் ஆவார்.
காமினி பொன்சேகா இயக்கிய ‘கெட்டி வலிகய’ திரைப்படத்தில் , ஒரு சிங்கள இளைஞனாக வெறும் 90 வினாடிகள் மட்டுமே நடித்ததற்காக அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் 1987 ஆம் ஆண்டு சரசவி விருது விழாவில் , பௌத்த துறவியாக அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புத் திறமைக்காக அவருக்கு சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது.
இலங்கையின் கலைத்துறையில் ஒரு சகாப்தம் முடிந்தது .

