Wednesday, January 14, 2026 3:52 pm
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
2022 மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 41 பேருக்கு எதிராக கம்பஹா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அலரி மாளிகையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் பொலன்னறுவைக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த போது உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவும், அவரது பாதுகாப்பு அதிகாரியும் மற்றும் சிலர் நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டனர். இந்த வழக்கில் 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஹான் மாபா பண்டாரா, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ரசாந்த கோடவெல ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் போது 180 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் எடுக்கப்பட்டன.

