Monday, December 22, 2025 10:09 am
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது வேலன் சுவாமிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை வேலன் சுவாமிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என இலங்கை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

