Friday, December 19, 2025 2:58 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ,வெங்காயம் , கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல வகையான காய்கறிகள் ஒரு கிலோ ரூ. 400-500 சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.
அதே நேரத்தில் ஒரு கிலோ கிராம் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 650 விலையில் விற்கப்படுகிறது.
கரட் , முட்டைக்கோஸ் , பீட்ரூட் , முள்ளங்கி மற்றும் லீக்ஸ் போன்ற காய்கறிகள் ரூ. 300-350 விலையிலும்
மிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ. 1300 விலையிலும் போஞ்சி ரூ. 1000 விலையிலும் விற்கப்படுகின்றன.
மேலும் , நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து வியாழக்கிழமை (18) அன்று 91 ,510 கிலோ கிராம் காய்கறிகளுக்கான தேவை கிடைத்ததாகவும் அந்த தேவையை பூர்த்தி செய்யும் காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு , அந்த காய்கறி இருப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது .
நுவரெலியா காய்கறி விவசாயிகள் நுவரெலியா பொருளாதார மையத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி அறுவடை செய்வதால் , மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்காது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் அதிக விலையில் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தகக்கது.

