Thursday, November 13, 2025 11:42 am
பருத்தித்துறை மரக்கறிச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள், மீண்டும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல்த்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகரசபையினால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையானது மீன் சந்தை வீதியில் இடம்மாற்றப்பட்டிருந்தது.
புதிய மரக்கறிச் சந்தை போதிய வசதிகளற்ற நிலையில் அமையப்பெற்றுள்ளதுடன், வியாபார நடவடிக்கைகள் போதாமையாக இருப்பதாக கூறி வியாபாரிகள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பெய்து வரும் கடும்மழை காரணமாக புதிய மரக்கறிச் சந்தை வளாகத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்த நிலையில் பவுசர் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து மரக்கறி வியாபாரிகள் நவீன சந்தை பழைய கட்டடத்திற்கு தாமாகவே சென்று இன்று வியாழக்கிழமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.


