Saturday, December 6, 2025 1:44 pm
நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பலதரப்பினரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக விவசாயத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்ட காரணத்தினால் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை நிலங்களில் வெள்ள நீர் உட்பிரவேசித்ததன் விளைவாக மலைநாட்டு மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இதில் கரட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக்கிழங்கு அவற்றின் ஏராளமாக அழிவடைந்துள்ளது.

குறிப்பாக நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறி நீரில் மூழ்கி அழுகிவிடுகின்றன.
மரக்கறி பயிர்கள் அழிவடைந்ததனால் அப்பகுதி விவசாயிகளின் இயல்பு வாழக்கை பாதிப்படைந்துள்ளது.


