Saturday, October 25, 2025 3:32 pm
USS Gerald R Ford என்ற உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அமெரிக்க போர்க் கப்பலில் சுமார் 90 விமானங்கள் வரை கொண்டு செல்ல முடியும்.
அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள் , அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

