Wednesday, March 4, 2026 11:01 am
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில் எரிபொருள் விநியோகம் தடைப்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல்கள் மீது ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகள் உடனடியாகத் தலையிடும் என ஓவல் அலுவலகத்திலிருந்து ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

