Wednesday, March 18, 2026 10:49 am
அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57 Sea Ranger ரக 10 ஹெலிகொப்டர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 ஹெலிகொப்டர்களும் மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த ஹெலிகொப்டர்களையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

