Tuesday, November 4, 2025 9:51 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் சமதான முயற்சியைப் பொருட்படுத்தாமல், ரஷ்யா உக்ரெய்ன் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
கிழக்கு உக்ரெய்ன் நகரமான போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் தனது துருப்புக்கள் முன்னேற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
போக்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தொழில்துறை மையங்களுக்கு அருகே சூழ்ந்த உக்ரெய்னிய இராணுவ கட்டமைப்புகளையும் அதன் இராணுவத்தினரையும் அழித்து வருவதாக ரஷ்யா நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது என ரெய்ட்ரஸ் (Reuters) செய்திச் சேவை கூறியுள்ளது.
பிரிகோரோட்னி (Prigorodny) நகர் பகுதிக்குள் சென்று அங்கு சோதனை – தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக ரெயாட்ர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அதேநேரம், டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஒக்டோபா் மாதம் முதல் கடும் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 81 சதவீதம் அப்பகுதியைத் ரஷ்யா கட்டுப்பபட்டில் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்காவின் போா் ஆய்வு மையம் (Institute for the Study of War – ISW) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த ஆய்வு மையம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ரஷ்யா இராணுவ முன்னேற்றமும் அதன் சாதக பாதக விளைவுகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரக் கூடிய ஆபத்துகள் – தடுப்பதற்கான வழிகள் பற்றியும் அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவீன ரஷ்யா இராணுவம், பெரிய அளவிலான மரபுவழிப் போரில் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் வரையறுக்கப்பட்ட குழுவைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு, இராணுவத் தொகுதி மற்றும் அதற்கு மேல் முடிவெடுக்கும் அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இப் பொறிமுறைகள் 1991 இற்கு முன்னரான ரஷ்யாவை மையப்படுத்திய சோவியத் யுனியன் கால மூலோபாயம் என்று அந்த ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் உக்ரெயன் இராணுவம் கெரில்லா தாக்குதல் முறைமைக்குள் விரைவில் முழுமையாக வந்துவிடக் கூடிய சந்தர்ப்பம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரெயன் போருக்கு மத்தியில் ரஷ்யா இராணுவத்தின் வளர்ச்சியடைந்து வரும் மறுசீரமைப்பு செயல்முறையை கவனமாகவும் தொடர்ச்சியாகவும் பகுப்பாய்வு செய்து அவதானித்தால், நேட்டோ இராணுவ கூட்டணியை ரஷ்யாப் படைகள் வெற்றீட்டக் கூடிய தன்மை தென்படுகிறது.
ஐரோப்பி நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் அடுத்த சுற்று ஆக்கிரமிப்பைத் தடுக்கக் கூடிய அளவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தன்னைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று அந்த ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்தது முதல், உக்ரெய்னின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 19.2 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அமரிக்காவின் அந்த ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.

