Tuesday, November 18, 2025 8:06 pm
இஸ்ரேல் – காசா அமைதித் திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஆதரவு வழங்கியுள்ளதாக சிஎன்என் (CNN) செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதித் தீர்மானம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.இஸ்ரேல் , ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்பும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.
அமைதித் தீர்மானத்திற்கு ஆதரவா இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் வாக்களித்தன. ஆனால், சீன ரசிய நாடுகளின் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை
அதேநேரம் வேறு நாடுகள் எதிராகவும் வாக்களிக்கவில்லை..
இந்த தீர்மானம் பற்றி ஹமாஸ் இயக்கம் திரும்ப்தி வெளியிடவில்லை. இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
லபஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய ஐநா தவறிவிட்டது என்றும் கமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், ஹமாஸின் இக் கருத்தை பாதுகாப்பு சபை நிராகரித்தது. அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை வரவேற்றுள்ளார்.
இஸ்ரேல் அது தொடர்பாக அமைதிகாத்து வருகிறது.

