Wednesday, March 4, 2026 9:56 am
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்பு செயல்முறைகள் குறித்து இச்சந்திப்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் சமூக மற்றும் அரசியல் சூழலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒரு செல்வாக்கு மிக்க குரலாக விளங்கும் நிலையில், சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியுடனான இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

