Thursday, October 30, 2025 11:21 am
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
“அமைதிக்கான வாய்ப்பையும், மிகவும் நீதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய பாதையையும்” வீணாக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், இஸ்ரேல் தனது கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் காசா மீதான எந்தவொரு மீறல்களுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காசாவில் வன்முறைத் தாக்குதல் முடிவுக்கு வருகின்றது என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், இந்த தாக்குதல்கள் வருத்தமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு போர் நிறுத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

