Friday, January 16, 2026 10:45 am
நாவற்குழி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


