Monday, November 10, 2025 8:40 pm
தென்கொரியாவில் மீன் பண்ணை ஒன்றிலுள்ள நீர் தாங்கி ஒன்றிலிருந்து, இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில், மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து 20 மற்றும் 30 வயதுடைய இலங்கையர்களும், 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவரும் இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில், இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் பணி சீருடையில் இருந்ததாகவும், மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

