Wednesday, January 14, 2026 10:09 am
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் காயமடைந்து, இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

