Friday, January 2, 2026 11:21 am
நேற்று வியாழக்கிழமை (01) மினுவாங்கொடை மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த 37 வயதுடைய ஆண் ஒருவரும் , 41 வயதுடைய பெண் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் மினுவாங்கொடையைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேநபர்கள் மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

