Friday, February 6, 2026 4:25 pm
வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு வாள்கள் மற்றும் ஒரு கோடாலி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டது.

