Wednesday, December 17, 2025 9:56 am
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 202 பயணிகளுடன் வானத்தில் வட்டமிட்ட விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
202 பயணிகளுடன் இலங்கையில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு வானில் சில மணித்தியாலங்கள் வட்டமடித்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

