இஸ்ரேல் காசா போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசிய – உக்ரெய்ன் போரையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உக்ரெய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சை ஆரம்பிப்பது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியில் சந்தித்து உரையாடவுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னோடியாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரசிய அதிகாரிகளை சந்தித்து உரையாடவுள்ளது.
ரசிய – உக்ரெயன் சமதான பேச்சுக்கு சாத்தியமான அனைத்து ஏற்பாடுகள் பற்றி உயர்மட்ட ஆலோசகர்கள் பேசவுள்ளதாக ரொய்டர் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின் ஆகிய இரு தலைவர்களும் தொலைபேசியில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உரையாடியதன் பிரகாரம் ஹங்கேரியில் சந்திப்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஹங்கேரியின் மிகப்பெரிய நகரமான புடாபெஸ்டில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.