Sunday, November 2, 2025 8:21 pm
நைஜீரிய நாட்டில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உள்ளிட்ட அமெரிக்கப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நைஜீரியாவுக்கு எதிரான நடவடிக்கை பற்றி சமூக ஊடகத்தில் ட்ரம்ப் விரித்துள்ளார். “துப்பாக்கிச் சூடு நடத்தி கிறிஸ்தவர்களை கொலை செய்யும் அவமானகரமான நாட்டுக்குச் செல்லாம்” அங்கு அத் துப்பாக்கிகள் எரிக்கப்படும் (guns-a-blazing) என்று டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாக அமெரிக்காவின் ஏபிசிநியுஸ் (abcnews) தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொன்று குவிப்பதை நைஜீரிய அரசு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக ஊடகத்தில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், நைஜீரிய அரசாங்கதுக்கு வழங்கப்பட்டு வரும் அமெரிக்க உதவிகள் அனைத்தும், இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நிறுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
நைஜீரிய அரசாங்கம், கிறிஸ்தவர்களை பாதுகாக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அதனை விரைவாக செய்யவும் வேண்டும். அவ்வாறு இல்லையேல் அமெரிக்கா, பொருத்தமான இராணுவ நடவடிக்கை எடுக்கும் என அப் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் விபரித்துள்ளார்.
அதேவேளை ட்ரம்பின் உத்தரவு குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். நைஜீரிய அரசாங்கத்துடன் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

