Tuesday, October 28, 2025 12:24 pm
ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனா டகாய்ச்சியை, அந்நாட்டின் அகாசகா அரண்மனையில் நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது ட்ரம்பை டகாய்ச்சி கைகுலுக்கி வரவேற்றார். இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்ட ட்ரம்ப் அது வலிமையான கைகுலுக்கலாக இருந்தது என்றார்.

