Friday, January 16, 2026 10:23 am
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போதே இந்த பதக்கத்தை ஜனாதிபதி ட்ரம்பிடம் தான் ஒப்படைத்ததாக மச்சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மச்சாடோ வழங்கிய அந்தப் பதக்கத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், அந்தப் பதக்கத்தை ட்ரம்ப் தம்மிடமே வைத்துக்கொள்ளப் போவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் பரிசு “பரஸ்பர மரியாதையின் ஒரு அற்புதமான அடையாளம்” என குறிப்பிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ஒருவர் அதனை மற்றுமொருவருக்கு பரிசளிக்க முடியாது என நோபல் குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

