வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படையினர் இணைந்து, நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையின் போது 4,626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேரும், சந்தேகத்தின் பேரில் 601 பேரும் கைது செய்யப்பட்டதுடன், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்த சுமார் 242 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரம் கைதாகி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிந்த 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 22 சாரதிகளும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை 3564 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கவனக் குறைவாக வாகனங்களை செலுத்திய 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.