Friday, December 26, 2025 2:17 pm
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கடற்கரையொன்றில் நேற்று (25) கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற குழுவொன்று கடல் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அள்ளுண்டு சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டனர்.
எனினும் காணாமல் போன 40 மற்றும் 60 வயதுடைய இரண்டு ஆண்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்பதையும் பொலிஸார் உறுதிபடுத்தினர்.
மேலும் , காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான விரிவான பணிகளை உயிர் காக்கும் பிரிவினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

