Wednesday, January 7, 2026 10:09 am
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2025.12.25 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாளை (08) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, விண்ணப்பதாரிகள் தமது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின் அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த மேலதிக விபரங்கள் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.ஜே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

