Monday, December 22, 2025 10:17 am
ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் , நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் , ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலும், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலையின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
இதற்கமைய ,மீண்டும் எதிர்வரும் 28.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

