Thursday, January 8, 2026 11:03 am
இன்று வியாழக்கிழமை (08) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்றைய சபை நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைந்துள்ளது.
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான காலப்பகுதி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான விதிகளின் கீழான நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் விசேட வினாக்கள் எழுப்பப்படவுள்ளன.
இன்றைய தினத்தின் பிரதான நடவடிக்கையாக, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
இறுதியாக, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

