Tuesday, October 28, 2025 1:39 pm
மேஷம் – காரியங்கள் அனுகூலமாகும். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
இடபம் – எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானம் அவசியம். சங்கடங்கள் நீங்கும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும். நன்மைகளை அதிகரிக்கும்.
மிதுனம் – காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.
கடகம் – திடீர்ச் செலவுகளும் ஏற்பட்டு கையிருப்பைக் குறைக்கும். உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் – புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி – புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடவும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் – உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விடயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். விற்பனை அதிகரிக்கும்.
விருச்சிகம் – புதிய முயற்சிகளில் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். உடல் நலனில் கவனம் தேவை. வீட்டு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு – அவப்பெயர் நீங்கும். நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும். முக்கியமான முடிவுகள் சாதகமாகும்.வியாபாரத்தில் மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள்.
மகரம் – எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். ஆதாயம் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். முக்கியமான முடிவு எடுக்க உகந்த நாள்.
கும்பம் – மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
மீனம் – எதிலும் நிதானமாகச் செயற்படவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

