Thursday, December 18, 2025 11:31 am
உலக அரபு மொழி தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகிறது.
ஐநாவின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் , அத்துடன் நிறுவனம் முழுவதும் அதன் ஆறு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது.
1973 ஆம் ஆண்டில் ஐநாவின் பொதுச் சபை அரபு மொழியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள் என்பதால் டிசம்பர் 18 ஆம் திகதியை ஐ.நா. அரபு மொழி நாளாகத் தேர்ந்தெடுத்தது.
அரபு மொழியானது வெறும் மொழியாக மட்டுமல்ல , அறிவுக்கான கலனாகவும் , மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி , அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றியது.
தனிநபர் கட்டமைப்பிலும் சமூக வளர்ச்சியிலும் அரபு மொழி ஒரு அடிப்படை கூறாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அரபு மொழிக்கான மன்னர் சல்மான் உலகளாவிய அகாடமி , அரபு மொழிக்குச் சேவை செய்யும் ஒரு முன்னேற்றமான நிறுவனமாக திகழ்கிறது.
இதன் மூலம் , அரபு மொழியின் செயல்திறனை உயர்த்தி அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துகிறது.
தொடர்ந்து ஒருங்கிணைந்த உலகில், அரபு மொழி பல்வேறு பண்பாட்டை ஒன்றிணைக்கும் பாலமாக உள்ளது. அதன் கவிதை நயத்துடன் கூடிய தன்மை, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த ஆழம் இதை ஒரு அழிக்க முடியாத மொழியாக்கிறது.
இந்த உலக அரபு மொழி தினத்தில், இந்த காலத்தால் அழியாத மொழியைப் போற்றவும், அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் செயலாற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கவும் நாம் முன் வரவேண்டும். உலக சமூகத்தில் அரபு மொழி, பண்பாடு, நிலைத்தன்மை, மற்றும் ஒற்றுமையின் மையமாக விளங்க நாம் பங்களிக்க வேண்டும்.
அதிக தொடர்பாடலும் படைப்பாற்றலும் நிறைந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் அதன் கலாச்சார மற்றும் அறிவுப் பங்கு தெளிவாக வெளிப்படுகிறது.
இதன்படி , உலக அரபு மொழி தினத்தை கொண்டாடுவது அதன் நாகரிக மதிப்பு கலாச்சார வளர்ச்சியில் அதன் பங்களிப்பும் குறித்த அதிகரிக்கும் விழிப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு , இன்றைய உலகின் வேகமான மாற்றங்களுடன் ஒத்திசைவதற்காக அரபு மொழியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ள உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

