Thursday, January 8, 2026 11:47 am
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இவற்றின் பிரதான காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு காணப்படுகின்றது.
நாட்டில் சுமார் 1.5 மில்லியன் பேர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். உலகில் ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் ஒரு மரணம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, கொழும்பில் நடைபெற்ற “இலங்கையின் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளில் புகையிலை தொழில்துறையின் தலையீடுகள்” என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

