Sunday, November 9, 2025 1:02 pm
தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள் மற்றும் இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட யுத்தத்தின் போதான, பின்னரான பெரும் குற்றங்கள் தொடர்பிலான வழக்குகளை இலத்திரணியல் படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வு இன்று மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம் ரில்கோ கோட்டலில் இடம்பெறுகின்றது.
பொறுப்புக் கூறலும் சுயாதீன வழக்குத் தொடுனர் தொடர்பிலான விவாதமும் எனும் தலைப்பில் மூத்த சட்டத்தரணி திரு. கே.எஸ். இரத்தினவேல் சிறப்புரை ஆற்றுகின்றார்.
அதனை தொடர்ந்து தற்போதைய சூழலில் அரசியலமைப்பாக்கச் செயன்முறையில் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?? என்ற தலைப்பில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

இக்கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார்கள்.
இக்கலந்துரையாடலின் நெறியாளராக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் செயற்படுகின்றார்.
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெறும் முக்கிய கலந்துரையாடலாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

