Monday, February 23, 2026 10:29 am
புத்தளம், அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டியுடன் சாரதியிடமிருந்த பணத்தையும் திருடிக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

