Monday, February 23, 2026 11:07 am
மூன்று இலட்சம் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை இன்று சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று முதல் மூன்று இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால் லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

