Monday, January 5, 2026 3:28 pm
மொனராகலையில் தனமல்வில – கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் தனமல்வில பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பலிபீடப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 24, 26 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் தனமல்வில மற்றும் ஹம்பேகமுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

