Friday, October 24, 2025 10:23 am
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய 26 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்ததோடு, கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்புக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகின் உதவியாளராகச் செயற்பட்ட மற்றுமொருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் சிலர் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

