Monday, January 19, 2026 11:08 am
உலகின் மிகப் பெரியதும், மிகவும் பெறுமதிமிக்கதுமான ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல் 2023ஆம் ஆண்டு இலங்கை நாட்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஊதா நிற இரத்தினக் கல் இதுவாகும். இது இயற்கையான ஆர்னால் ரக இரத்தினக் கல் என அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையானது என இலங்கை இரத்தின ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைமை இரத்தினக் கல் நிபுணர் அஷான் அமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

