Friday, December 19, 2025 11:01 am
யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் கவிசனா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவியை அவரது தாயார் தினமும் படிக்குமாறு கூறி வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி , கடந்த 12ஆம் திகதி வீட்டில் குப்பைகளை எரிப்பது போல நடித்து , தன் மீது பெற்றோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் , அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

