தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பொதிகளில் ஐஸ் ,ஹசிஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகுதி ‘உனகுருவா சாந்தா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கடற்படையினரின் கூற்றுப்படி, 3 பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருக்கலாம் எனவும், மிகுதி 48 பொதிகளில் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.