கரீபியன் தீவு பகுதியிலிருந்து அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களைக் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலொன்றை அமெரிக்க இராணுவம் குண்டுவீசி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கமொன்றில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருட்களுடன் அமெரிக்காவை நோக்கி வருகைதந்த குறித்த கப்பலை குண்டுவீசி தகர்த்தது தனக்கு மிகப்பெரிய கௌரவம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பலில் உயர்ரக போதைப்பொருளான பெண்டானைல் கடத்தப்பட்டிருந்ததாக உளவுத்துறையினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், உயிருடன் மீட்கப்பட்ட இருவர் ஈகுவடோர் மற்றும் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போதைப்பொருளை கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தால் 25000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.