Tuesday, January 6, 2026 12:01 pm
பச்சை மிளகாய் செடிகள் அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் முழுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தேவை மற்றும் உற்பத்திச் செலவுகளால் எதிர்காலத்தில் பச்சை மிளகாயின் விலை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

