Wednesday, December 24, 2025 12:28 pm
உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்று புதன்கிழமை (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை ரூ. 2000 இனால் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி , 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354 ,000 ஆகவும் , 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை ரூ. 327,500 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் , இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமையைக் கூறலாம்.

